TNEB Bill Payment Extension during COVID19 Lockdown

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் கட்டணம் செலுத்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், தாழ்வழுத்த நுகர்வோர் மின்கட்டணம் செலுத்த ஜூன் 15-க்கு பிறகு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலை 5 வரை மின்கட்டணம் செலுத்த ஏற்கனவே அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள அனைத்து உயரழுத்த நுகர்வோர்களை பொருத்தவரை (HT) தமிழ்நாடு மின்சார வாரியம் தனது மின் துண்டிப்பிற்கான உரிமையை விட்டு கொடுத்ததினால் பிப்ரவரி 2020, மார்ச் 2020, ஏப்ரல் 2020 மாதத்திற்கான மின்கட்டணத்தை முறையே 03/2020, 4/2020 மற்றும் 5/2020-ல் செலுத்தாமல் இருப்பின் அந்த உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் தங்களது கட்டணத்தை 15.06.2020-க்குள் செலுத்தலாம். அவர்களுக்கு மின் துண்டிப்பு மற்றும் மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

மே 2020 மாத உயர் மின்னழுத்த மின் கட்டணத்தை நுகர்வோர்கள் அந்த மாதத்திற்கான குறிப்பிட்ட கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தமிழக அரசின் மின் கட்டணம் கணக்கிடுதல் பற்றிய விவரம்:

ஒரு நுகர்வோரின் மின் அளவீடு முந்தைய மாத கணக்கீடுபடி எடுக்கப்பட்டு, பின்னர் அதைத் தொடர்ந்து அடுத்த இருமாத மின் அளவீடு, அடுத்த கணக்கீடு மாதத்தில் மேற்கொள்ளப்படும் போது கீழ்வருமாறு கணக்கீடு செய்யப்படும்!
A consumer who has been billed under PMC and the actual reading taken during next assessment month, the manner of detailed billing in such cases is outlined below!


Source: News7 Tamil

1 Comments

Previous Post Next Post

Contact Form